2 Nov 2015

மட்டு மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரம்

SHARE
இவ்வாண்டுக்கான இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. இத் தேர்தல் இம் மாதம் 07ஆம் திகதி நாடு பூராகவும் நடைபெறவுள்ளது.
இந் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 32 வேட்பாளர்கள் இத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் இதில் மட்டக்களப்புத் தொகுதியில் 12 பேரும் கல்குடாத் தொகுதியில் 12 பேரும் பட்டிருப்புத் தொகுயில் 8 பேரும் போட்டியிடுவதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பணிமனையின் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என். நைரூஸ் தெரிவித்தார். 
மேற்படி விடயம் தொடர்பில் உதவிப் பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 2015 ஆம் ஆண்டு இவ் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 18,607 இளைஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும் இதில் மட்டக்களப்புத் தொகுதியில்  6817 பேரும் கல்குடாத் தொகுதியில் 6739 பேரும் பட்டிருப்புத் தொகுயில் 5051 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

இதே வேளை மட்டக்களப்பு இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் விபரமும் அவர்களுக்கான தொடர் இலக்கங்களும் தற்போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிமனையினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்புத் தொகுதியில் - அப்துல் மஜீட் முஹம்மத் நஸர்தீன், ஆறுமுஹம் தேவதீபன், எட்வட் ஜெயராசா பயஸ்ராஜ், சிவானந்தம் லக்ஷனா, சுதேசன் மதுசன், நெல்சன் சதீஸ்ராஜ், முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் சிஹாப், முஹம்மத் பதூர்தீன் முஹம்மத், சம்ஹான், ரத்தினசிங்கம் நிரஞ்சன், விஜேந்திரன் விவேகரன், றம்ழான் முஹம்மத் அஜ்மல், ஜெயினுலாப்தீன் முஹம்மத் சாஜித் ஆகியோரும்

கல்குடாத் தொகுதியில் - அருலேந்திரன் விநோத், குழந்தை ஜெபகுமார் ,சுந்தரலிங்கம் சுதாகரன், தர்மரெத்தினம் ஆர்தீபன், பேரின்பம் கமலரூபன், மனோகரன் சுரேஸ்காந், முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றனீஸ், முஹம்மத் தம்பி முஹம்மத் பாரிஸ், முஹம்மத் ஹனிபா முஹம்மத் மபாரிஸ், விநாயகமூர்த்தி குகநாதன், விமலசிரி கமலசிரி, ஜமால்தீன் முஹம்மத் திபாஸ் ஆகியோரும்     

பட்டிருப்புத் தொகுதியில் கனேஷ் தனுசன், கோபாலன் பிரசாத், தவலிங்கம் தேவமதி, தேவராசா முரளி, பரமாநந்தன் பகிரதன், பாக்கியராஜா மோகனதாஸ், பிறைசூடி வதீஸ்குமார், புண்ணியமூர்த்தி தவராசா ஆகியோருமாக 32 இளைஞர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: