மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடியில் இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை (01) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.
களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும், களுவாஞ்சிகுடி கிராம மக்ககள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
களுவாஞ்சிகுடியில் இடம்பெறும் ஏனைய கட்சிகளினதும், ஏனைய பொது அமைப்புக்களினதும், அரச நிறுவனங்கள் போன்றவற்றால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவை தொடர்பான அறிக்கைகள் வெளி உலகிற்கு வெளிக் கொணரப்பட்டு வருகின்றன.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பங்குபற்கும் நிகழ்வுகள், மற்றும் கூட்டங்களுக்கு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப் படுவதில்லை என இப்பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற மேலும் ஒரு சம்பவவமே இன்று ஞாயிற்றுக் கிழமையும் இடம்பெற்றுள்ளதாக பிரதேச உடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment