அமெரிக்க தூதரக இராணுவ சிவில் குழுவின் சார்பில் சம்பூரில் பாதிக்க பட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்தி வேலை திட்டங்களையும் அங்கு மேற்கொள்ள வேண்டிய வேலைகளையும் ஆராய்வதற்காக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம். ரி . ஏ . நிசாமோடு சம்பூருக்கு விஜயம் மேற்கொண்ட பின்பு அமெரிக்க தூதரக இராணுவ சிவில் குழுவின் தலைவர் டெமற்றியஸ் ஹமண்ட் கிழக்கு மாகாண முதலமைச்சரை வியாழக்கிழமை (25) சந்தித்தார்.
இதன் போது இக்குழுவினருடன் முதலமைச்சர் உரையாற்றும் போது கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களின் ஆங்கில அறிவை விருத்தி செய்யும் வண்ணம் அம்பாறை திருகோணமலை மட்டகளப்பு மாவட்டங்களில் ஆங்கில மொழி அபிவிருத்தி வளநிளையங்களை நிறுவித்தருமாறு கோரிக்கை முன்வைத்தார்.
இதனை கருத்தில் கொண்ட அமெரிக்க தூதரக இராணுவ சிவில் குழுவின் தலைவர் இந்த விடயம் தொடர்பில் தாம் அக்கறை எடுப்பதாக உறுதியளித்ததோடு கிழக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள பல பாடசாலைகளின் அபிவிருத்திக்கு தம்மால் முடிந்தளவான வேலைத்திட்டங்களை முன்னேடுக்கவுள்ளதகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ . எல் . எம். நசீர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் மாகாண கல்விப் பணிப்பாளர் எம். ரி . ஏ . நிசாம் ஆகியோரும் கலந்து கொண்டனர் .
0 Comments:
Post a Comment