இயற்கைக்கு மாறுபாடான வித்தில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், மனிதனுடைய வாழ்க்கை தற்போது சுருங்கிக் கொண்டு வருகின்றது. விரைவான உணவு வகைகளை ( fast food நாம் உட்கொண்டு வருவதனால் பல்வேறு விதமான தீங்குகளை அந்த உணவு வகைகள் ஏற்படுத்தி எதிர் காலத்தில் மனித இனம் இருக்குமா என்ற கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளோம்.
விரைவான உணவுப் பழக்கத்தினால் தற்போது மனிதர்களிடத்தில் பாரிய நோய்கள் காணப்பட்டு வருகின்றன. என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் காலாநிதி.எம்.கோபாலரெத்தினம், தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச பாலர் பாடசாலை ஆசிரியர்ளுக்கும், பெற்றோர்களுக்கும், வீட்டுத் தோட்டம் தொர்பான பயிற்சி நெறி ஒன்று இன்று திங்கட் கிழமை (23) ஓந்தாச்சிமடம் சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….
உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயினால் ஒரு நாளைக்கு, 5.1 மில்லியன் மக்கள் உயிரிழந்து வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். இவ்வாறான பாரிய நோயினால் மனித இனம் தினமும் அழிவடைந்து கொண்டு போகின்றது.
இவைகளைக் கருத்தில் கொண்டு எமது பழங்காலத்தவர்கள் உண்டு வந்த முல்லை, முசுற்றை, வல்லாரை, பொன்னாங்கண்ணி, முருங்கை, கானாந்தி, முள்முருக்கை, குறிஞ்சா, போன்ற இலை வகைகளை எமது மக்கள் தினமும் உணவில் சேர்த்து வந்தால் எமது எதிர்கால குழந்தைகளையாவது நோயில்லாமல் வழர்த்தெடுக்க முடியும்.
இவைகளை விடுத்து செயற்கை உணவு வகைகளையும், இரசாயனங்கள் கலந்த உணவு வகைகளையும், நாம் உண்பது மாத்திரமின்றி எமது குழந்தைகளுக்கும் கொடுத்து வருகின்றோம். இவைகளைத் தவிர்து இயங்கையாகவே கிடைக்கும் உணவுப் பழக்க வழக்கங்களை நாம் கைக்கொள்ள வேண்டும்.
எனவே பாலர் பாடசாலை மாணவப் பருவத்திலிருந்து இயற்கை மூலிகைகளையும், இலை வகைகளையும், உணவில் சோர்த்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் வீட்டுத் தோட்டத்தை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment