1 Nov 2015

மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வினை பார்வையிட்ட அமைச்சர்

SHARE
தீர்வை ரீதியில் ஊடகவியலாளர்களுக்கான மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வினை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக பார்வையிட்டார்.
தீர்வை ரீதியில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் தேசிய நிகழ்வுக்கான நேர்முகத்​தேர்வு அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைந்துள்ள ஊடக அமைச்சில் கடந்த 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு  (29) வரை நடைபெற்றுது.
நேற்று நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இடம்பெறும் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள அமைச்சர் வருகை தந்தார். அத்துடன் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுடனும் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

அத்துடன் இந்த நேர்முகத்தேர்வுக்கென சுமார் 3000 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள் என அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
SHARE

Author: verified_user

0 Comments: