9 Nov 2015

வன்முறைகளைக் குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையைக் குறைத்தல் தொடர்பான தற்போதைய நிலை பற்றிய கலந்துரையாடலொன்று கடந்த வெள்ளிக்கிழமை (06) மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.
மகளிர் மற்றும் சிறுவர் அமைச்சின் ஊடாக நடைபெற்ற இக்கலந்துரையாடல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தற்போது எவ்வாறு இருக்கின்றது? அதற்கான பொறிமுறைகள் என்ன? என்பது தொடர்பாக ஆராய்வதற்காக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
இதில் மகளிர் மற்றும் சிறுவர் அமைச்சின் அபிவிருத்தி உதவி செயலாளர் அசோக அலவத்தை,  அபிவிருத்தி பணிப்பாளர் திருமதி வாசுகி அருள்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையைக் குறைப்பதற்கான நல்ல பொறிமுறை இயங்குவதாகவும் பல அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் அர்பணிப்புடன் வேலை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் செயலணி, பால்நிலை அடிப்படையிலான வன்முறையைக் குறைக்கும் மையம், பொலிஸ் நிலையத்தில் பதியப்பட்ட பெண்கள் சிறுவர்கள் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள், சட்டத் துறை அத்தோடு பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்குள்ளாகி உயிர்தப்பி வாழ்வோருக்கான பரிந்துரைத்தல் வழிமுறை தொடர்பாக யு.என்.டி.பி (UNDP) யின் தொழில்நுட்ப இணைப்பாளர் விமாலி அமரசேகர  முன்வைத்தார்.

இதில் 14 பிரதேச செயலகத்தின் செயலாளர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் திணைக்களம், வைத்தியசாலை வைத்தியர்கள், பல்கலைக்கழகம்  மற்றும் பெண்கள் சிறுவர்கள் தொடர்பாக பணியாற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்
SHARE

Author: verified_user

0 Comments: