8 Nov 2015

வெள்ளையரின் ஆட்சிக் காலத்தில் தமிழும் சைவமும் மழுங்டிக்கப்பட்ட போது அவற்றை எதிர்த்து நின்றவர் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை.

SHARE
வெள்ளையரின் ஆட்சிக் காலத்தில் தமிழும் சைவமும் மழுங்டிக்கப்பட்ட போது அவற்றை எதிர்த்து முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் மாணவனாக இருந்து தமிழையும், சைவத்தையும் வழர்த்து, சமூகக் கட்டமைப்புக்களையும் வளர்து பாதுகாத்து எமது பின் சந்தத்தியினர் அறியக்கூடிய வகையில் விடுட்டுச் சென்றிருக்கின்றார். புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அந்த விதத்தில் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.
என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாள் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்துள்ளார்.

புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் 37 வது நினைவுதின நிகழ்வை முன்னிட்டு சனிக்கிழமை (07) மட்டக்களப்பு குருக்களக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் உள்ளதும் நல்லதும் எனும் நூல் வெளியீடு இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கiயில்…

புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை மண்டூக் கிராமத்தைப் பிறப் பிறப்பிடமாகக் கொண்டாலும் மண்டூர் கிராமம் தற்போது மிளிர்வதற்குக் காரணம் திருச்செந்தூர் புராணமாகும். புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை பகவத் கீதை, புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றைக் கற்று சிந்தமணி என்ற பத்திரியை ஊடாக பல விடையங்களை வெளிக்கொணர்ந்துள்ளார்.

இவர் எழுதிய புத்தகங்களுடாக இன்னுமொருவருடைய உடம்புக்கும், உள்ளத்திற்கும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் பல நல்ல விடையங்களை எமது சமூகத்திற்கு விட்டுச ;சென்றுள்ளார்.

குருக்கள்மடம் கிராமம் நூறுவீதம் தமிழ் மக்களைக் கொண்டமைந்ததாகும், இக்கிராமத்தில் சிறந்த சமூகப் பண்புகளையும் கூட்டுப் பொறுப்புக்களையும். கொண்டமைவதற்கு புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் அளப்பெரிய பங்கு அமைந்துள்ளது. எனலாம். 

தீண்டத்தகாதமை என்ற கொள்கைக்கான புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை சென்னை சென்று பயிற்சி பெற்று எமது சமூகத்திற்கும், இந்த நாட்டிற்கும் சமத்துவம், மற்றும் சமாதானத்தினை விட்டுச் சென்றுள்ளார். 

புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை எழுதிய பல புத்தகங்களிலும் மனிதன் மனிதனாக இருக்க வேண்டும் மனிதன் மிருகமாக மாறமுடியாது என்ற பல விடையங்களை எடுத்தியம்பியுள்ளார். எனவே உலகம் போற்ற புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் புகழ் ஓங்கச்செய்ய அவர் தொடர்பான பல நூல்களையும், வெளியீடுகளையும், மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: