10 Nov 2015

நீர் பாதுகாப்புதிட்டம் தொடர்பான கலந்துரையாடல்

SHARE

(எம்.எஸ்.எம்.சறூக்)

மட்டக்களப்பு மாவட்ட நீர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புசபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் யூனிசெப் மற்றும் Plan International   நிறுவனங்களின் அனுசரனையில் எதிர்வரும்  வியாழக் கிழமை காலை (12) 9.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகமாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டநீர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான சமர்ப்பணங்கள் துறைசார்ந்த நிபுணர்களால் முன்வைக்கப் படவுள்ளதோடு அரசாங்க அதிபரின் தலைமையிலான மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பிரதானிகள் அடங்கிய நீர் பாதுகாப்புதிட்ட செயலாற்றுகைகுழு வொன்றும் அன்;றையதினம் உருவாக்கப் படவுள்ளது.

இக்கலந்துரையாடல் நிகழ்வில் தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புசபையின் மேலதிக பொதுமுகாமையாளா, பிரதி பொதுமுகாபையாளர், உதவி பொதுமுகாமையாளர்(கிழக்கு), மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் ஆகியோர்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர் பாதுகாப்பு திட்டத்தோடு தொடர்புடைய அரசதிணைக்களங்கள், 

உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய நீர் வழங்கல மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் கே.விநோதன் செவ்வாய்க் கிழமை (10) தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: