ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் கௌரவ ரவுப் ஹகீம் அவருடன் கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் அவர்களை சனிக்கிழமை இரவு (21) கொழும்பில் சந்தித்து நல்லிணக்கம் மற்றும் வடகிழக்கு மீள்குடியேற்றம் சம்பந்தமாக கலந்துரையாடினார்கள்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சனிக்கிழமை மாலை இலங்கை வந்த, ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவரான சமந்தா பவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் கௌரவ ரவுப் ஹகீம் அவர்கள் சந்தித்து நல்லிணக்கம் மற்றும் வடகிழக்கு மீள்குடியேற்றம் சம்பந்தமாக கலந்துரையாடினார்கள்.
இதன் போது கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் கிழக்குமாகணத்தில் உள்ள பல்வேறு பிரைச்சினைகள் தொடர்பாகவும் அங்கு கருத்துகளை முவைத்தார் .
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் ஏற்பாட்டில் அமெரிக்க தூதுவர் சமந்தா பவரிற்கு வரவேற்பு விருந்துபசாரமொன்று வெளிவிவகார அமைச்சில் சனிக்கிழமை இரவு வழங்கப்பட்டது. இதில் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும், அமைச்சர்களும், கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வின்போதே முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவரான சமந்தா பவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்கள்.
0 Comments:
Post a Comment