6 Nov 2015

சம்பூரில் கனடா வாழ் தமிழர்களின் ஆதரவுடன் தற்காலிக வீடு....

SHARE
(ஆர்.பி.ரோஸன்)

கனடா வாழ் தமிழர்களின் ஆதரவுடன் கனேடிய திருமலை நலன்புரிச்சங்கத்தினரால் சம்பூரில் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களில் பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகளை அமைத்துக்கொடுக்கும்பணி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது அதற்கான ஆலோசனை கூட்டம்  சம்பூரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன்  கனேடிய திருமலை நலன்புரிச்சங்கத்தின் செயலாளர் ஆர்.கையிலைவாசன் என பலர் கலந்த கொண்டனர்.

திருகோணமலை வாழ் தமிழ் மக்கள் மற்றும் கனடா வாழ் தமிழ் மக்களின் நிதிப் பங்களிப்பில் இடம் பெறப் போகும் இவ்வீட்டுத்திட்டம் கிழக்கு மாகாண மீழ் குடியேற்ற அமைச்சின் நேரடி வழிகாட்டல் மூலம் இடம் பெறவுள்ளது.

முதல் கட்டமாக 21 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வழங்கவுள்ள இத் தற்காலிக வீட்டுத்திட்டத்திம் தலா இரண்டரை இலட்சம் ரூபாய் பெருமதியானதாக அமையும் எனவும் 16க்கு 20 எனும் அளவுத் திட்டத்தில் அமைக்கப்படவுள்ள இந்த வீட்டத்திட்டத்தில் ஒரு படுக்கையறை மற்றும் ஒரு சமையலறை என்பதுடன் ஒரு வரவேற்பு அறையும் அமையவுள்ளது.07 அடி உயரத்திற்கு சுவர் உள்ளவாறு சிறந்த தரமான ஒரு தற்காலிக வீடாக இது அமையும் என கனேடிய திருமலை நலன்புரிச்சங்கத்தின் செயலாளர் ஆர்.கையிலைவாசன்  தெரிவித்தார்.

மேலும் தற்போது சம்பூரில் விடுவிக்கப்பட்ட பகுதியில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் 62 பேர் காணப்பட்ட போதும் அவர்களில் சிலரை யு என் எச்.சீ.ஆர் மற்றும் ஏ.ஆர்.ஆர். போன்ற நிறுவனங்கள் பெறுப்பேற்று வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

49 பேருக்கான வீட்டுத்திட்டம் அமைக்கும் பெயர் விபரத்தை கனேடிய திருமலை நலன்புரிச்சங்கத்தினர் கோரிய போதும் முதற் கட்டமாக மூதுார் பிரதேச செயலகத்தால் 21 பேர் விபரம் வழங்கப்பட்டுள்ளது.இதற்கான அடிக்கல் நடல் நிகழ்வு எதிர்வரும் 09ம் திகதி திங்கட்கிழமை இடம் பெறவுள்ளது. எனவும் தெரிவிக்கின்றனர். 


SHARE

Author: verified_user

0 Comments: