1 Nov 2015

கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கதிரவெளி வைத்தியாலைக்கு விஜயம்

SHARE
கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய துரைராசசிங்கம் கதிரவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கள விஜயமொன்றினை மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது வைத்தியசாலையின் குறை நிறைகளை வைத்தியசாலை வைத்தியர் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களிடம் கேட்டறிந்து கொண்டார். 
இவ் வைத்தியசாலையில் நாளாந்தம் 75 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருவதாகவும் ஆனால் இங்கு இருக்கும் ஒரு வைத்தியர் போதாமல் இருப்பதுடன் வைத்தியசாலைக்கு உரிய கட்டிடத் தொகுதிகளும் விருத்தி செய்யப்பட வேண்டும், அத்துடன் இங்கு தாதியர்கள், மருந்து வழங்குனர்கள் எவரும் இல்லை என்பதுடன் இவ்வைத்தியசாலைக்கு கதிரவெளியைச் சுற்றியுள்ள சுமார் எட்டு கிராமத்து மக்கள் வருகை தந்து மருத்துவம் பெறுகிறார்கள் எனவே இவ் வைத்தியசாலைக்கு உரிய வசதிகள் செய்து தரப்படுவதுடன் இவ் வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

இதன் போது அமைச்சர் பிராந்தியத்திற்குப் பொறுப்பான வைத்திய அதிகாரியைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவிய போது எதிர்வரும் டிசம்பர் மாதம் அளவில் இவ்வைத்தியசாலைக்கு இன்னுமொரு வைத்தியர் நியமிக்கப்படுவதுடன் மருந்து வழங்குனர் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Hospital visit 3
Hospital Visit 4

SHARE

Author: verified_user

0 Comments: