17 Nov 2015

திக்கோடையில் தொடரும் காட்டுயானைகளின் அட்டகாசம்.

SHARE
(திலக்ஸ்)

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட திக்கோடைக் கிராமத்தில் இன்று செவ்வாய் கிழமை (17) அதிகாலையில் காட்டுயானை புகுந்து தனது அட்டகாசம் ஏற்படுத்தியு;ளளதுடன் பலத்த சேதத்தையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருதாவது, செவ்வாய்க் கிழமை  அதிகாலையில் 3 மணியளவில் திக்கோடை கிராமத்தினுள் புகுந்த தனியன் காட்டு யானையால் மக்க்ள பலத்த பீதியடைந்துள்ளனர்.
ஒருவாறு காட்டுயானையை மக்கள் பட்டிசு வெடிக்கவைத்தும், சத்தமிட்டும் விரட்டியுள்ளனர். இந்நிலையில் திக்கோடை பாடசாலைக்கு முன்பாக உள்ள தங்கத்துரை திருக்கணேசன் என்பவரது கைத்தொழில் அரிசி ஆலையினை உடைத்துவிட்டுச் சென்றுள்ளது.

இவ்வாறான காட்டு யானைகளின் பிரச்சினைகள் அப்பிரதேசத்தில் நாளாந்தம் தொடர்ந்த வண்ணமே உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து மக்களின் அச்சமின்றிய வாழ்க்கையினை தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




SHARE

Author: verified_user

0 Comments: