26 Nov 2015

முறையற்ற வகையில் கொட்டப்படும் கழிவுகளை நிறுத்துமாறு பொதுமக்கள் கடிதம்.

SHARE
களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயவீதியில் மண்முனைதென் எருவில் பற்று பிரதேசத்துக்குட்பட்ட பிரதேசங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கள் வாழும் குடியிருப்புப் பிரதேசத்திற்கு மிகமிக அண்மித்த பகுதியில் திண்மக் கழிவு முகாமைத்துவத்திற்கு புறம்பான வகையில் பாதுகாப்பற்ற முறையில் கொட்டப்படுவது மிகுந்தசுகாதார சீர்கேடுகளை உருவாக்கியுள்ளது.
எனத் தெரிவித்து களுதாவளை பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்று வியாழக்கிழமை (26)  மண்முனைதென் எருவில் பற்று, பிரதேச சபை, செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அக்கடித்தில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது….

களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயவீதியருகில், தொடர்ந்த மேற்படி பிரதேச சபையின்hல் கழிவுகள் கொட்டப் பட்டு வருவதானல், இச்சூழலில் வாழும் மக்களாகிய எமக்கு,  சகிக்கமுடியாத வகையில் துர்வாடை வீசுகின்றது காற்று மூலமாக நோய்க் கிருமிகள் பரவுகின்ற அபாயம் உள்ளது. மக்கள் வாந்திபேதி முதலான நோய்களின் தாக்கத்திற்குஉள்ளாகியுள்ளனர்.

நோய் காவிகளான ஈ, நுளம்பு முதலானவைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.

அண்மித்த பிரதேசங்களில் உள்ள விவசாய நிலங்களில் கொட்டப்படும் பொலீத்தீன் கழிவுகள் காற்றில் மக்களின் குடியிருப்புக்களுக்குள், பறந்து வருகின்றது.

மாமிசக் கழிவுகளைநாய், காகம் முதலான பிராணிகள் தூக்கிக் கொண்டு வந்து வாழிடங்களில் போடுகின்றன. சிலசமயங்களில் கிணறுகளிலும் போட்டுவிடுகின்றன.

சிலசமயங்களில் மனிதமலக் கழிவுகளும் இவ்விடத்தில் கொட்டப்படுவதை நாங்கள் அவதானித்திருக்கிறோம்.
குப்பைகளை கொண்டு செல்லும் வீதியில் தொடராகவும், குப்பைகள் கொட்டப்பட்டுக் கிடக்கிறன.

குப்பகைளை உண்பதற்கு மாடுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதனால் மாடுகளும் பாதிப்படைகின்றன மறுபுறத்தில் குப்பைகளை சாப்பிட வருகின்ற மாடுகள் பயிர்களையும் சேதப்படுத்துகின்றன.

இந்தகுப்பை கொட்டும் இடம் மீன்பிடி வாடிக்கும் மிக அண்மித்ததாக இருப்பதால் மேற்படிசுகாதாரப் பிரச்சினைகள் அனைத்தையும் எதிர்கொள்கின்றனர்.

கோயில் சமுத்திர தீர்த்தமாடச் செல்லும் பிரதானபாதையை மறித்தே இக்குப்பைகள் கொட்டப்படுகின்றன. எனத்  தெரிவித்து

இப்பிரதேசகுடியிருப்பாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், ஆலயநிருவாக சபை, பாடசாலை, சங்கங்கள்-மன்றங்கள் இணைந்து இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

மேற்படி கழிவுகள் கொட்டுவதை உடன் நிறுத்துமாறும், இப்பிரச்சினைக்கு உடனடியானதீர்வினை எதிர்பார்த்து இவ்வேண்டுகோளைச் சமர்ப்பிக்கிறோம். எனவே எங்களது சுகாதாரத்தினையும், வாழ்வாதாரத்தினையும் கருத்திற்கொண்டு உடனடியானத் தீர்வினைவழங்கும்படி வேண்டுகிறோம். எனவும் அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடித்தின் பிரதிகள்

உள்ளுராட்சி உதவி ஆணையாளர், மட்டக்களப்பு, அரசாங்க அதிபர், கச்சேரி,மட்டக்களப்பு, பிரதேசசெயலாளர், மண்முனைதென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி. சுற்றாடல் அதிகார சபை, மட்டக்களப்பு, பிராந்திய வைத்திய அத்தியட்சகர்,மட்டக்களப்பு, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  ஞா.சிறிநேசன், ச.வியாளேந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

SHARE

Author: verified_user

0 Comments: