தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பிரகடனம் இன்று (04.11.2015) புதன்கிழமை காலை 9.00 இலிருந்து பி ப 12.30 வரையில் தென்கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் நடாத்த இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் திட்டமிட்டுள்ளது.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களது பிரச்சினைகள் ஐ.நா விசாரணைக்குட்படுத்தப்படல் வேண்டும். வடபுலத்திருந்து 1990ஆம் ஆண்டுகளில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களது பிரச்சினைகள் தற்போது ஐ.நா வின் அனுசரணையோடு இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படவிருக்கும் விசாரணை பொறிமுறையில் உட்படுத்தப்படாமை எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் விடயமாகும்.
இவ்விடயம் தொடர்பாக நியாயமான தீர்வினை பெற்றுக் கொள்ள இலங்கை அரசையும் ஐ.நா அமைப்பையும் ஆவண செய்ய வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பை தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் விடுத்துள்ளது.

0 Comments:
Post a Comment