மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை சிறைச்சாலைக்கு சென்று இளநீர் வழங்கி உண்ணாவிரத போராட்டத்தினை நிறைவு செய்தனர்.
சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்வதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்ற நிலையில் கடந்த 08ஆம் திகதி முதல் மேற்கொண்டுவந்த உண்ணாவிரத போராட்டம் இன்று கைவிடப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நடவடிக்கையெடுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
எனினும் காலம் கடந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 11 தமிழ் அரசியல் கைதிகள் இருந்த நிலையில் ஒருவர் அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்து.
0 Comments:
Post a Comment