7 Nov 2015

உள்ளதும் நல்லதும் எனும் நூல் வெளியீடு

SHARE

புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் 37 வது நினைவு தின நிகழ்வை முன்னிட்டு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு குருக்களகள்மடம் கலைவாணி மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் உள்ளதும் நல்லதும் எனும் நூல் வெளியீடு இடம்பெற்றது.
புலவர்மணி பெரியதம்திப்பிள்ளையின் நினைவுப் பணிமன்றத்தின் தலைவர் சி.சந்திரதேசகரம் தலைமையில் நடைபெற்ற இந்நிந்நிகழ்வில்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் மு.கோபாலரெத்தினம், யாழ் பல்கலைக் கழகத்தின் ஓய்வுநிலைப் தமிழ்த்துறைப் பேராசிரியர்  எஸ்.சிவலிங்கராசா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வரவேற்புரையினை அ.விக்னேஸ்வரனும், தொடக்கவுரையினை குருக்களகள்மடம் கலைவாணி மகாவித்தியாலய அதிபர் க.செல்வராசாவும், நூல் அறிமுக உரையினை கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறைத் தலைவர் திருமதி ரூபி வலன்ரினா பிரான்ஸிஸ_ம், நன்றியுரையினை புலவர்மணி பெரியதம்திப்பிள்ளையின் நினைவுப் பணிமன்றத்தின் செயலாளர் பெ.சத்தியலிங்கமும் நிகழ்த்தினர்.

நூலின் முதற் பிரதியினை புலவர்மணி பெரியதம்திப்பிள்ளையின் நினைவுப் பணிமன்றத்தின் தலைவரிடமிருந்து யாழ் பல்கலைக் கழகத்தின் ஓய்வுநிலைப் தமிழ்த்துறைப் பேராசிரியர்  எஸ்.சிவலிங்கராசா பெற்றுக் கொண்டார்.

இதன்போது புலவர்மணி பெரியதம்திப்பிள்ளை தமிழுக்காற்றிய சேவைகள் பற்றி  இதன்போது கலந்து கொண்ட பலரும் உரையாற்றினர்.



 












SHARE

Author: verified_user

0 Comments: