மட்டக்கள்பபு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் 5 லெட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற பொது நூலகங்களுக்கு கணணி மற்றும், நூல்கள் என்பன செவ்வாய்க் கிழமை (18) காலை போரதீவுப் பற்று பிரதேச சைபயில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பழுகாமம் பொது நூலம், மற்றும, முனைத்தீவு பொதுநூலகம் ஆகியவற்றிற்கு தலா ஒவ்வொறு கணணிகளும், ஏனைய 11 பொது நூலகங்களுக்கு, நீதிக்கதைகள், பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான உசாத்துணை நூல்கள், போன்ற பல புத்தகங்களும், வழங்கி வைக்கப்பட்டதாக போரதீவுப்பற்று பிரதேச சபையிக் சன சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என்.கருணாநிதி தெரிவித்தார்.
போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி கா.சித்திரவேல், சன சமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என்.கருணாநிதி, மற்றும் பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், நூலகர்கள், வாசகர் வட்டத்தினர் உட்டபட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment