வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வந்தாறுமூலை உப்போடை வீதியை கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய துரைராசசிங்கம் பார்வையிட்டார்.
கடுமையான மழை காரணமாக பாதிக்கப்பட்ட வந்தாறுமூலை உப்போடை வீதியை விவசாய அமைச்சர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் பாதைகளும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ள நிலையில் மக்களின் அன்றாட போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் மட்டக்களப்பு வந்தாறுமூலை உப்போடை வீதி வெள்ள நீரில் மூழ்கி அவ்வழியால் பயணம் மேற்கொள்ளும் மக்கள் பாரிய சவால்களுக்கு மத்தியில் தமது பயணத்தினை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் இவ்வீதியினை நேரில் சென்று பார்வையிட்டு அப்பிரதேச முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி இப்பாதையினை உரிய விதத்தில் அமைப்பது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரின் 2015ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் இப்பதைக்கு கொங்கிறீட்டு இடுவதற்கான ஆரம்ப கட்ட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment