கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மேற்கொண்டுவரும் செயற்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயும் விசேட மாநாடு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் சனிக்கிழமை (31) நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாநகர சபைகள்இ நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் ஆகியவற்றினால் அந்தந்த உள்ளூராட்சி மன்றப்பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அபிவிருத்தி வேலைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
அதன்போது கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் முறைப்பாடுகள் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இது மழைகாலம் என்பதனால் வடிகான் துப்பரவில்லை என்றும்இ வீதிகளில் வெளிச்சமில்லாமல் இருள் சூழ்ந்துள்ளது என்றும்இ சில வீதிகளில் மாணவர்கள் பாடசாலைக்குப் போக முடியாதளவு மழை நீர் நிரம்பிக் காணப்படுவதாகவும் இதுபோன்று பல முறைப்படுகள் வந்த வண்ணமே உள்ளன.
என்வே மக்கள் பிரதி நிதிகள் இல்லாத சபைகளாக இருக்கும் சபைகளின் செயலாளர்களாக இருக்கும் நீங்கள் பொது மக்கள் விடையத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மக்களின் தேவைகள் முடிந்தளவு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். முறைப்பாடுகள் வராதவாறு மக்களின் குறைகளை நிவர்த்திச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அங்கு சமூகம் கொடுத்திருந்த செயலாளர்களிடம் கட்டளையிட்டார்.
அது போன்று இன்று கிழக்கில் நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்இ யுவதிகள் வேலையற்று இருக்கிறார்கள். இவர்களில் சிலர் வருமானமின்றி கஷ்டத்துடன் இருந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்குவதில் நாம் அதிக அக்கரை செலுத்த வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தைக் கூட்டவேண்டும் அப்போதுதான் உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆளணிகளை நியமிக்க முடியும். ஒவ்வொரு சபைகளிலும் ஏற்பட்டிருக்கும் ஆளணிக் குறைபாட்டை சரி செய்வதன் மூலமும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க முடியும். எனவே அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவதில் மும்முறமாக செயற்பட நீங்களும் ஆயத்தமாகுங்கள். கிழக்கில் அதிக வேலைவாய்ப்புக்களை வழங்கும் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் பட்டதாரிகள் மற்றும் பலருக்கும் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.ஏ.அஸீஸ்இ மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஆணையாளர் எம்.சலீம்இமாகாண உள்ளூராட்சி அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.றாபி மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் வளவாளர்கள் 45 உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் கிழக்கு மாகாணத்திலுள்ள கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment