4 Nov 2015

தென்கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்

SHARE
தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் “முஸ்லிம்களது பிரச்சினைகள் ஐ.நா விசாரணைக்குட்படுத்தப்படல் வேண்டும்.” என வலியுறுத்தி இன்று (04.11.2015) நடைபெற்ற கவனயீர்ப்பு  போராட்டம்; தென்கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் நடைபெற்றது.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களது பிரச்சினைகள் ஐ.நா விசாரணைக்குட்படுத்தப்படல் வேண்டும். வடபுலத்திருந்து 1990ஆம் ஆண்டுகளில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களது பிரச்சினைகள் தற்போது ஐ.நா வின் அனுசரணையோடு இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படவிருக்கும் விசாரணை பொறிமுறையில் உட்படுத்தப்படாமை எமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. தென்கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பிரகடனமும் நிறைவேற்றப்பட்டது.












SHARE

Author: verified_user

0 Comments: