13 Nov 2015

மட்டு மாவட்ட மண் அகழ்வு காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் குறித்த கூட்டம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண், ஆற்று மண், கிறவல் அகழ்வதற்கான மற்றும் கால்நடைகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் தொடர்பான கூட்டமொன்று  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (12) மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வு காரணமாக ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் வகையிலேயே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீ.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன், அலிசாகிர் மௌலானா, மாகாண சபை உறுப்பினர்களான பிரதி தவிசாளர் இ. பிரசன்னா, ஆர். துரைரெட்ணம், கே.கருணாகரம் (ஜனா) , எம்.நடராசா, ஜீ.கிருஸ்ணப்பிள்ளை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் பட்டிப்பளை, வெல்லாவெளி, வவுணதீவு, கிரான், செங்கலடி, வாகரை உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மண் அகழ்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.

அத்துடன், மண் அகழ்வு தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையிலும், அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் தீர்வுகளை முன்வைப்பதற்காகவும் குழுவொன்றும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: