4 Nov 2015

திடீர் விபத்துக்களிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு

SHARE
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அம்பாரை மாவட்ட அலுவலகம் நடாத்தும் திடீர் விபத்துக்களிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு இன்று (05.11.2015) பி.ப 1.30 தொடக்கம் 3.30 மணி வரை கல்முனை புனித மரியால் ஆண்கள் இல்லத்திலும் பி.ப. 3.45 தொடக்கம் 5.45 மணிவரை கல்முனை மெதடிஸ் சிறுமியர் இல்லத்திலும் நடைபெறவுள்ளது.
புனித மரியால் ஆண்கள் இல்லத்தில் 52 பிள்ளைகளுக்கு தனியாக ஒரு விழிப்புணர்வு நிகழ்வும், ஏனைய ஹேமன் சிறுமியர் இல்லம், லிற்றில் பிளவர் சிறுமியர் இல்லம், ஜேசு ஜீவிக்கின்றார் சிறுமியர் இல்லம், மெதடிஸ் சிறுமியர் இல்லங்களிலுள்ள 67 பெண் பிள்ளைகளுக்கு ஒன்றாக மெதடிஸ் சிறுமியர் இல்லத்திலும் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறவுள்ளது,

மாவட்ட செயலகத்துடன் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் வைத்திய அதிகாரி டாக்டர்.சராப்டீன், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் தம்மிக்க குலத்துங்க, உள சமூக உத்தியோகத்தர் யு.எல்.அசார்டீன், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜீ.ரேவதி, சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆர்.யாசுகி ஆகியோரும் கலந்து கொண்டு விளக்கமளிக்கவுள்ளனர்.



  


SHARE

Author: verified_user

0 Comments: