30 Nov 2015

லங்கா ஐ . ஒ. சி இன் சிரேஷ்ட பிரதித் தலைவ ருக்கும் கிழக்குமாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

SHARE
லங்கா   ஐ . ஒ. சி  இன் சிரேஷ்ட பிரதித் தலைவர் சிட்டம் ராஜு  மற்றும் பிரதித் தலைவர் சுனில் குமார் நக்தாவானே க்கும்   கிழக்குமாகாண முதலமைச்சருக்கும்  இடையில் சந்திப்பு ஒன்று  இன்று  திங்கட் கிழமை (30) காலை திருகோணமலையில் அமைந்துள்ள முதலமைச்சர்  அலுவலகத்தில்   இடம்பெற்றது .
இதன் போது லங்கா   ஐ . ஒ. சி  இன் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இ துறைமுக விஸ்தரிப்பு தொடர்பாக  மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் தார் மூலப் பொருட்களை கிழக்கு மாகாணத்தில் பொதி செய்யும் நடவடிக்கை மூலம் இங்குள்ள இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்புகளை வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன


SHARE

Author: verified_user

0 Comments: