17 Nov 2015

நீரிழிவு நோய்க்கு எதிராக மட்டக்களப்பில் பேரணி

SHARE

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சலரோக தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. 
இந்த ஊர்வலத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நீரிழிவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் திருமதி. தர்சினி கருப்பபைய்யா மற்றும் மகப்பேற்று விஷேட வைத்திய நிபுனர் டொக்டர் கே.கருணாகரன் மற்றும் வைத்திய விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் பலரும் கலந்துகொண்டனர். 

இதன்போது, நீரிழிவு நோய் தொடர்பாகவும் அதன் பக்க விளைவுகள் தொடர்பாகவும் விழிப்பூட்டும் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. 

இந்த விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை சென்றது
SHARE

Author: verified_user

0 Comments: