3 Nov 2015

சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள் - திருமலை அரசாங்க அதிபர் சந்திப்பு

SHARE
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின  இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைமையதிகாரி கிளயா மெய்ட்ரோட் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார ஆகியோரிற்குமிடையிலான சந்திப்பு இன்று (03) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
காணாமல் போனோரது குடும்பங்களின் சமூக பொருளாதார மற்றும் வாழ்வாதார விடயங்களை அபிவிருத்தி செய்வதற்கு சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு திட்டத்ததை 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளவுள்ளது. 
இவற்றை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவே அரசாங்க அதிபருடன் கலந்தாலோசித்ததாக திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்தார்.

குறித்த திட்டம் அநுராதபுரம் , மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: