(க.விஜி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு தொடக்கம் பழுகாமம் வரையிலான பிரதான வீதியே பழுதடைந்த நிலையில் மழைநீர் தேங்கிக் காணப்படுகின்றது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான இப்பிரதான இவ்வீதியானது கடந்த ஆண்டு புணரமைக்கப்பட்ட வீதியாகும். இவ்வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் மாணவர்கள், பாதசாரிகள் உட்பட பலரும், போக்குவரத்து செய்வதில் மிகவும் பலத்த இன்னல்களை எதில்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தேர்தல் தொகுதியிலுள்ள படுவாங்கரையும், எழுவான் கரையையும் இணைக்கும் இப்பிரதான வீதி மிகவும் குன்றும் குழியுமாக மழைநீர் தேங்கியுள்ளமை தொடர்பில் இதுவரையில் யாரும் கவனிக்கவில்லை என பிரயாணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment