எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட பின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறையும் நோய் எதிப்பு சக்தி குறைவடையும் போது இலகுவில் வேறு நோய்கள் தாக்குகின்றன இவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நோய்கள் பல தாக்கிய நிலை எயிட்ஸ் எனப்படும் எனப்படும்
என தேசிய பாலியல் நோய் தடுப்பு பிரிவு நிபுணர் வைத்தியர் சத்தியா ஹேரத் தெரிவித்தார்.
சர்வதேச எச்.ஐ.வி. தினத்தினை முன்னிட்டு எச்.ஐ.வி. நோய் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று இன்று சனிக்கிழமை (28) கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
இருக்கின்றதா என்பதை குருத்திப் பரிசோதனை மூலம் கண்டறியலாம் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட நிலையை எச்.ஐ.வி பிளஸ் ( பொசிற்றீவ்) என அழைக்கப்படும் எச்.ஐ.வி தொற்று இல்லை எனின் எச்.ஐ.வி மைனஸ் – ( நெக்கற்றீவ்) என அழைக்கப்படும்
எச்.ஐ.வி அதிகமுள்ள உடல் திரவங்கள் வைரஸ் குருதி, சுக்கிலப்பாயம், யோனித்திரவம், தாய்ப்பால்,போன்ற உடல் திரவங்களில் செறிந்து காணப்படுகிறது
கருத்தரிக்க முன் எச்.ஐ.வி இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ளுதல், கருத்தரித்த பின் எச்.ஐ.வி இரத்தப் பரிசோதனையை மேற்கொள்ளுதல், எச்.ஐ.வி தொற்று இருக்குமானால் பாலியல் நோய் தடுப்பு நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டும், எச்.ஐ.வி தொற்றுக்கு எதிரான மருந்துகளை வைத்தியர் நியமித்தவாறு உட்கொள்ள வேண்டும், போன்றவற்றின் மூலம் தாய் - சேய் எச்.ஐ.வி தொற்றை தடுக்கலாம்
எச்.ஐ.வி தொற்றுகளுக்குரிய மருந்துகள் தற்போது பரந்த அளவில் பாவனையில் உள்ளது. மருந்துகள் வைரஸை முற்றாக அழிப்பதில்லை ஆனாலும் குருதியில் வைரஸை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கட்டுப்படுத்துகிற்றன.
இதனால் எச்.ஐ.வி தொற்றுள்ள ஒருவர் நீண்ட நாட்கள் சிக்கல்கள் எதுவுமின்றி வாழ உதவுகிறது. வைரஸ் குருதியில் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு குறையும் போது மற்றவர்களுக்கு எச்.ஐ.வி பரவும் தன்மையும் குறைகிறது. எச்.ஐ.வி தொற்றுகளுக்குரிய மருந்து களைப் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே ஆரம்பத்திலேயே எச்.ஐ.வி தொற்றுள்ளதை கண்டறிதல் நன்மை தரும் தொற்றுக்குரிய குருதி பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம்.
எச்.ஐ.வி இருக்கின்றதா என்பதைக் கண்டறியலாம். துற்போது எச்.ஐ.வி பரிசோதனை வசத்திகள் சகல அரச வைத்தியசாலைகளிலும் கிடைக்கின்றன. என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment