1 Nov 2015

இலக்கிய விழாவும், கலாசார விழாவும்

SHARE
(வ.சக்திவேல்)

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை மேற்கு பிரதேச கலாசாரப் பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலாசார விழாவும் இலக்கிய விழாவும் பிரதேச செயலக மண்டபத்தில்  இடம்பெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிராமிய பாரம்பரிய கலை, பண்பாட்டு விழுமியங்களை வெளிக்கொணரும் வண்ணம் இவ் காலசார விழாவும் இலக்கிய விழாவும் அமைந்திருந்தது. 
இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன், கிழக்கு மாகாண கலாசாரத் திணைக்கள ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளர் எஸ்.எதிர்மன்னசிங்கம், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் த.மலர்செல்வன், வவுணதீவு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் கலைஞர்கள் கௌரவிப்பு மற்றும் ஆக்கப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கல், கலை நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களுக்கு பரிசில்கள் வழங்கல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இவ் விழாவில் வடமோடி கூத்து, தென்மோடி கூத்து, கரகம், வசந்தன், கவிதை மற்றும் கன்னங்குடா பாடசாலை மாணவிகளின் நடனம் உள்ளிட்ட பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

Cultural 2
Cultural 3
cultural 4
cultural 5

SHARE

Author: verified_user

0 Comments: