இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி துறைநீலாவணை சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் கல்விக் கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (22) துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் வளவாளராக கணித பாட ஆசிரியர் வ.மதிவண்ணன் உட்பட துறைநீலாவணை சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதுடன் கல்விப் பொதுத்தராதர சாதரணதரப் பரீட்சைக்குரிய வினாக்கள் தொடர்பான கையேடுகளும் வினாக்கள் தொடர்பான விளக்கங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment