வேல்ஸ் சினிமா பட்டறையால் வருடாந்தம் நடாத்தப்படும் பாலுமகேந்திரா திரைப்பட விழா சனிக்கிழமை (21) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது. நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தென்னிந்திய திரைப்படத்துறை பிரமுகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கையின் தமிழ் திரைப்படத்துறை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
இதில் வளர்ந்து வரும் சொல்லிசை சிறந்த கலைஞன் என்ற விருதை திருகோணமலை மண்ணின் மைந்தன் சி.வி. லக்ஸ் பெற்று தனது மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். சி.வி. லக்ஸ் அந்த மேடையிலேயே இலங்கையின் மூத்த சொல்லிசை கலைஞன் கிரிஷான் மகேசன் அவர்களின் பாராட்டையும் பெற்றுக்கொண்டார் ..
இதுவரை 14 பாடல்களை வெளியிட்டுள்ள இந்த கலைஞன் விரைவில் "சிலம்பு " என்ற இசை தொகுப்பையும் வெளியிடவுள்ளார் .
0 Comments:
Post a Comment