மருதமுனையின் அரசியல் அதிகாரம் பற்றி இளைஞர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் தெரிவித்தார்.
மருதமுனை “மிமா” சமூக சேவைகள் அமைப்பு ஏற்பாடுசெய்த வெற்றி விழாவும் வீரர்கள் கௌரவிப்பு நிகழ்வும் கழகத் தலைவர் என்.எம்.அனீஸ் அகமட் தலைமையில் (2015.10.30) இரவு மருதமுனை அல்-ஹிக்மா கனி~;ட வித்தியாலையத்தில் நடைபெற்றது. இங்கு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாநகரசபை உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றுகையில், மருதமுனைக்கிராமம் எல்லாத்துறைகளிலும் முன்னேற்றமடைந்து வருகின்ற ஒரு கிராமமாகும். ஓப்பீட்டளவில் இந்தக்கிராமத்தின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் இன்று ஏனைய கிராமங்களில் வியந்து பேசப்படுவதை காணுகின்றோம். அந்தளவிற்கு மருதமுனை கிராமம் பிற கிராம மக்களால் நன்கு அறியப்பட்ட கிராமமாகும். அரசியலில் இந்தக் கிராமத்துக்கு உயர்ந்தபட்ச அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

அயல் கிராமமான கல்முனைக்கு மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மாகாண அரசியல் அதிகாரம் கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாநகரசபையின் உயர்ந்தபட்ச அதிகாரமான முதல்வர் பதவி அங்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மருதமுனைக் கிராமத்தின் உயர்ந்தபட்ச அதிகாரம் என்ன? என்பது பற்றி இளைஞர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
விளையாட்டுக் கழகங்கள் விளையாட்டுக்கு அப்பால் சமூகசேவைகளில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. அதேபோன்று அரசியல்ரீதியாகவும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இங்கிருக்கும் இளைஞர்கள் முன்வர வேண்டும். ‘முதலமைச்சர் யார்?’ ‘தேசியப்பட்டியல் யாருக்கு வழங்கப்பட வேண்டும்?’, ‘மாகாண அமைச்சுப்பதவி இவருக்குத்தான் வழங்க வேண்டும்.’, ‘மாகாணசபை உறுப்பினர் பதவி இன்னாருக்குத்தான் வழங்க வேண்டும்.’ என்று அயல் கிராமங்களின் அரசியல் அதிகாரங்களுக்காக மருதமுனையில் இருக்கும் இளைஞர்கள் கேள்வியெழுப்புவதையும் அதற்காக குரல் கொடுப்பதையும் காணுகின்றோம். ஆனால் இந்த மருதமுனை கிராமத்தின் உயர்ந்தபட்ச அரசியல் அதிகாரம் என்ன? என்பதைப்பற்றி இளைஞர்கள் சிந்திக்க வேண்டும், கேள்வியேழுப்ப வேண்டும.; எனவும் தெரிவித்தார்.
நிகழ்வில் மாநகரசபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர்அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, மற்றும் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.முர்ஸித் ஆகியோரும் உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் “மிமா” விளையாட்டுக் கழகத்தின் வீரர்கள் வருகை தந்த அதிதிகளால் நினைவு கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
0 Comments:
Post a Comment