மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் விநியோகங்கள் வசதிகள் ஏற்படுத்தின் கொடுக்கப்பட்டுள்ள பொதும் அவற்றின் முழுமையான பயனை அல்லது நலனை மக்கள் பெற்றுக் கொள்ளாத நிலை காணப்படுகிறது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
இன்றைய தினம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட நீர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடலினைத் தலைமையேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த வருடத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியோடு 3000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடி நீர் விநியோகத்தினை வழங்கியிருந்தோம். இவ்வருடமும் இது தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
தொடர்ச்சியான குடிநீர் வழங்கும் விடயங்களுக்கு பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி சபைகள், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை உள்ளிட்டவைகளும் ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்க வெண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஆரோக்கியம் தொடர்பில் மிகக் குறைந்தளவிலேயே முன்னுரிமை கொடுக்கப்படுகின்ற விடயமாகக் காணப்படுகிறது.
பொது இடங்களில் வழங்கப்படும் உணவுகள், உணவு தயாரிக்கப்படும் இடங்கள், தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் சுவையூட்டிகள் என்றெல்லாம் நாம் கவனிக்காத விடயங்கள் உள்ளன.
உலகளவில் ஓர்கானிக் எனப்படுகின்ற இயற்கை உர உற்பத்திக்கள் குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்ற நேரத்தில் இலங்கையைப் பொறுத்தவரையில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடியளவான கிருமி நாசினி, பசளையைப்பாவிக்கின்ற மாவட்டமாக இருக்கிறது. இவ்வாறான சாவல்களையெல்லாம் மிக நுணுக்கமாக எதிர் கொள்ளnவுண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.
இன்று ஒரு ஆய்வு குறித்த செய்தியைப் படித்தேன் எல்.ஈ.டி எனப்படும் மின்குமிழ்களைப் பாவிப்பதனால் மனிதனுடைய இயற்கையுடனனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு புற்றுறோய்கள் பலவற்றுக்குக் காணமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் நீர் முகாமைத்துவம் பாதுகாப்பான நீர் முகாமைத்துவம் என்பவையெல்லாம் முக்கியத்துவம் மிக்கதாக அமைவதோடு இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படவும் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் யூனிசெப் மற்றும் பிளான் இன்ரர்நசனல் நிறுவனங்களின் அனுசரணையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில், அரசாங்க அதிபரின் தலைமையிலான மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பிரதானிகள் அடங்கிய நீர் பாதுகாப்பு திட்ட செயலாற்றுகை குழுவொன்றும் உருவாக்கப்பட்டது.
இக்கலந்துறையாடலில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மேலதிக பொது முகாமையானர்இ பிரதி பொது முகாபையாளர்இ உதவி பொது முகாமையாளர் (கிழக்கு)இ மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் ஆகியோர்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர் பாதுகாப்பு திட்டத்தோடு தொடர்புடைய அரச திணைக்களங்கள்இ உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான விளக்கமளிப்புகள் முதுநிலை பயிற்சியாளரும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பயிற்சியாளருமான கலாநிதி எஸ்.கே.வீரகொட, சிரேஸ்ட சமூகவியலாளர் என்.ஐ.விக்கிரமசிங்க ஆகியோரால் முன்வைக்கப்பட்டன.
மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய உதவி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்தத்திட்டத்தில் யுனிசெப், பிளான் இன்ரர்நசனல் ஆகியன தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் இணைந்து இந்த நீர் பாதுகாப்பு திட்ட செயலாற்றுகை குழுவும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment