மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேசத்தில் பனீச்சங்கேனி கிராமத்தில் வாழும் இந்த மக்கள் எந்தவித அரச உதவிகளும் அற்ற நிலையில் வாழ்கின்றார்கள். இந்த மக்களை போன்று பல மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளற்ற துர்ப்பாக்கிய நிலையில் அன்றாடம் கிடைக்கும் தொழில் மூலம் சிறுதொகை பணத்தை கொண்டு தங்கள் வாழ்நாளை கடத்தி செல்கின்றனர்.
இவர்கள் பனீச்சங்கேனி பாலத்தின் அருகில் உள்ள கன்டல் தாவரம் காணப்படும் குளத்தில் மீன் மற்றும் இறால் போன்றவற்றை எந்தவித நவீன மீன்பிடி கருவிகளும் அற்ற நிலையில் தங்கள் முயச்சினால் பிடித்து அதனை அந்த குளத்தின் அருகே உள்ள மட்டக்களப்பு -திருகோணமலை பிரதான வீதியில் வைத்து விற்று தங்கள் வயிற்றுப்புழைப்பை நடாத்துகின்றார்கள்.
இப்படிப்பட்ட இந்த மக்களுக்கு யாராவது முன் வந்து தொழில் செய்வதக்கான உபகரணங்களையோ அல்லது பணத்தினையோ பெற்றுக்கொடுப்பார்களா என அந்த மக்கள் மனவேதனையுடன் அங்கலாய்க்கின்றனர்
0 Comments:
Post a Comment