2015ம் ஆண்டுக்கான சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியா போட்டி கடந்த வாரம் தாய்லாந்து நாட்டில் இடம்பெற்றது. இதில் எமது நாட்டினைப் பிரதிநிதித்துவப்படுத்தி கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் தரம் 06 தொடக்கம் 08 வரையான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கணித பிரிவில் தரம் 07 ஐச் சேர்ந்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவனான துரைராசசிங்கம் இமயவன் என்பவர் போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி வெண்கலப்பதக்கம் பெற்று எமது நாட்டிற்கும் மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.
இந்த சர்வதேச போட்டியில் கலந்து கொண்டுள்ள மாணவர்களில் ஒரே ஒரு தமிழ் மாணவன் இவர் என்பதுடன் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரான துரைராசசிங்கம் அவர்களின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய கணித பிரிவு மாணவர்கள் 06 வெண்கலப்பதக்கங்களும் 03 வெள்ளிப்பதக்கங்களும், 01 தங்கப்பதங்கமும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment