(இ.சுதா)
சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவோம் எனும் தொனிப் பொருளிலான செயலமர்வு துறைநீலாவணை தெற்கு பல்தேவைக் கட்டிடத்தில், வெள்ளிக்கிழமை (28) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ரி.தயாளன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சி.அருந்ததி மற்றும் கிராம உத்தியோகத்தர்களான தி.கோகுலராஜ் இவை.கனகசபை உட்பட கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சிறுவர்கள் எதிர் கொள்கின்ற பிரச்சினைகள் அதனைத் தடுப்பதற்கு பெற்றோர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் மற்றும் சிறுவர்களின் பாடசாலைக் கல்வி, சிறுவர்களின் உரிமைகள் மீறப்படும் போது அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பான விளக்கங்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment