(இ.சுதா)
கடந்த பல வருட காலமாக எமது நாட்டில் நடைபெற்ற யுத்தம் தமிழ் மக்கள் வாழ்வில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.உயிர் இழப்புக்கள் மாத்திரமன்றி பொருளாதார நிலையிலும் பின்னடைவான சூழ்நிலை ஏற்படுவதற்கு யுத்தம் காரணமாக அமைந்துள்ளதாக அண்மையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பங்குடாவெளி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதன் பிற்பாடும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எதுவிதமான விசாரணைகளும் இல்லாத நிலையில் அரசியல் கைதிகள் எனும் போர்வையிவ் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர் இவர்களின் விடுதலையில் நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு வெளிக் கொணரப்பட வேண்டும்.
ஒரு நாட்டில் யுத்தம் நடைபெறுகின்ற கால கட்டத்தில் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவது வழமையான செயற்பாடுகளாகக் காணப்படுகின்ற போதிலும் யுத்தம் முடிவுற்று பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் ஜனநாயக நாடு ஒன்றில் பல்லாயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் சிறைத் தண்டனையினை அனுபவிப்பதனை ஏற்றுக் கொள்ள முடியாது.பல வருடங்களாக சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்ப பொருளாதார நிலைமை அடி மட்டமான சுமையினை ஏற்படுத்தியுள்ளது மாத்திமன்றி அவர்களின் பிள்ளைகளின் கல்வி நிலைமைகளிலும் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது.
பாடசாலைகளில் பரிசளிப்பு விழாக்களை வருடத்திற்கு ஒரு தடவை நடத்துவதன் மூலமாக மாணவர் மத்தியில் போட்டித்தன்மை ஏற்படுவது மாத்திரமல்லாது கல்விச் செயற்பாடுகளிலும் பாரிய முன்னேற்றத்திற்கு வழிவகுப்பதாக அமையும்.பரிசளிப்பு விழாக்கள் பாடசாலைகளின் நற்பெயருக்கு உரம் ஊட்டுவதாக அமைவதாக் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment