கொட்டும் மழையிலும் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ந்த வண்ணமுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணிக் கிராமத்திற்குள் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 1 மணியளவில் புகுந்த 3 காட்டு யானைகளால் மக்கள் பெரும் அல்லோல கல்லோல கல்லோலப் பட்டுள்ளனர்.
கிராமத்தில் புகுந்த 3 காட்டு யானைகளையும், மக்கள் தீப்பந்தம் ஏந்தியும் பட்டாசி கொழுத்தியும் ஒருவாறு கிராமத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
இக்காட்டுயானைகள் அப்பகுதியிலிருந்த தென்னம் தோட்டம் ஒன்றையும், அழித்துவிட்டுச் சென்றுள்ளது. இதனால் 10 இற்கு மேற்பட்ட தென்னைகளும், வாழைகளும் அழிக்கப்பட்டுள்ளன.
தொடர் அடை மழையினால் பாதிப்புக்களை எதிர் நோக்கியுள்ள தமக்கு காட்டு யானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன. இவற்றுக்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், எதுவித நடவடிக்கைகளும் எடுக்காமலிருப்பது எதமக்கு மிகுந்த வேதனையளிக்கின்றது. சம்மந்தப்பட்டவர்கள் காட்டுயானைகளை எமது கிராமங்களுக்குள் வருவதைத் தடுக்காதலிருந்தால் எமது பாதிப்புக்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும் எனவே சம்மந்தப்பட்டவர்கள் காட்டுயானைகள் எமது கிராமங்களுக்குள் ஊடுருவுபதை தடுக்க முன்வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.
0 Comments:
Post a Comment