2015 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு கௌரவத்தினை பெற்றுக் கொடுத்த விளையாட்டு வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று (16) கொழும்பு கிங்ஸ்பேரி ஹோட்டலில் இடம்பெற்றது.
கொழும்பு பல்லைக்கழகத்தின் உடற்கல்வி பிரிவு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துகொண்டார். நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதியமைச்சர் உரை நிகழ்த்துகையில்,
“நாங்கள் தொடர்ச்சியாக கிராமப் புறங்களில இலைமறை காய்களாக இருக்கும், வீர, வீராங்கனைகளை இனங்கண்டு, அவர்களுக்கு உதவிகளை செய்து, அவர்களுக்கு உற்சாகம் ஊட்டவேண்டும். அவர்களது திறமைகளை உலகறியச் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதுவே எமது இலக்காகும்.
இவ்விலக்கினை அடைய நாம் அயராது உழைப்போம். மேலும் கொழும்பு பல்லைக்கழகத்தின் பழைய மாணவன் என்ற ரீதியில் எனக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமையை இட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.” என்றும் மேலும் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment