மட்டக்களப்பில் தொடர்ந்து பொய்து வரும் தொடர் மழை காரணமாக பல வீதிகளும் சேதடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் திக்கோடை – தும்பாலை வீதி வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதனால் இவ்வீதி முற்றாகச் சேதடைந்துள்ளதுடன், இவ்வீதியுடனான போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.
மேலும் களுமுந்தன்வெளி - நாவற்கேணி வீதி, பெரியபோரதீவு – பழுகாமம் பிரதான வீதி, மருதங்குடலை வீதி, முனைத்தீவு – பட்டாபுரம் வீதி, அம்பிளாந்துறை – தாந்தாமலை பிரதமான வீதி போன்ற பல வீதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வீதிகளைப் பயன்படுத்தும் விவசாயிகளும், பாடசாலை மாணவர்களும், ஏனைய பொதுமக்களும் மிகுந்த சிரமங்களை எதிர் கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment