2 Nov 2015

தேற்றாத்தீவு கிராம மாணவர்களுக்கு பரிசளிப்பு

SHARE
(எஸ்.ஸிந்தூ)


மட்டக்களப்பு தேற்றாத்தீவை சேர்ந்ந அமர் த. பாக்கியராசா அவர்களின் ஞாபகார்த்தமாக தேற்றாத்தீவு கிராம மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று(31.10.2015)சனிக்கிழமை தேற்றாத்தீவு மகா வித்தியால மண்டபத்தில் வெற்றி விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.சோதிநாதன் தலைமையில் காலை 09.மணியளவில் இடம் பெற்றது.

இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் ந.புள்ளநயகம் அவர்கள் கலந்து கொண்டார்இசிறப்பு அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சிரஸ்ர விரிவுரையாளர் சோ.ஜெகநாதன் அவர்களும் விசேட அதிதிகளாக தேற்றாத்தீவு மகாவித்தியாலய அதிபர் ஆ.உதயகுமார் சிவகலை வித்தியாலய அதிபர் எஸ்.சிவசம்பு களுதாவளை மகாவித்தியாலய அதிபர் எஸ்.அலோசியஸ் அம்பிளாந்துறை கனிஸ்ர வித்தியாலய அதிபர்  க.தவராசாஇ மாவேற்குடா மகாவித்தியாலய அதிபர் மு.குணசேகரம் S.P.M Service  GMBG, German)உரிமையாளர் த.மகேந்திராசா ஆகியோரும் அழைப்பு அதிதிகளாக முன்னாள் சே.ஆசிரிய ஆலோசகர் எஸ்.சபாரெத்தினம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்

பரிசளிப்பு விழாவில் தேற்றாத்தீவை சேர்ந்த தரம் -5 க.பொத.(ச/த) மற்றும் க.பொத.(உ/த) சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்ளுக்கு பரிசளிப்பு இடம் பெற்றது.தேற்றாத்தீவு மகா வித்தியால மாணவர்கள் தேனுகா கலைக்கழம் வெற்றி விநாயகர் கல்வி நிலையம் ஆகியவற்றின் கலை நிகிழ்ச்சிகளும் இடம் பெற்றன.




SHARE

Author: verified_user

0 Comments: