களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயவீதியில் மண்முனைதென் எருவில் பற்று பிரதேச சபையால் குப்பைகள் கொண்டுவதற்கு இன்று சனிக் கிழமை (28) அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து குப்பைகளைக் கொட்டவிடாமல் தடுத்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
களுதாவளை திருநீற்றுக்கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயவீதியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புப்க்களை அண்டிய பகுதியில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக மண்முனை தென் எருவிப் பற்று பிரதேச சபை அப்பிரதேசத்தில் சேகரிக்கப்பட்டுவரும் குப்பைகளைக் கொட்டி வருகின்றது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை எதிர் கொண்டு வருவதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடையம் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்மக்கள் பல எதிர்ப்புக்களைத் தெரிவித்த போதும் தொடர்ந்து மக்களின் கருத்துக்களைக் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து பிரதேச சபை அவ்விடத்தில் குப்கைகளைக் கொட்டி வருகின்றது.
இருந்த போதிலும் கடந்த வியாழக்கிழமை (26) களுதாவளையைச் சேர்ந்த பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து இக்குறித்த இடத்தில் குப்பைகளைக் கொட்ட வேண்டாம் என கடிதம் ஒன்றையும் பிரதேச சபை செயலாளர் திருமதி.யாகஸ்வரி வசந்தகுமாரனிடம் நேரடியாகக் கையளித்திருந்தனர்.
இவற்றையும் பொருட் படுத்தாது தொடரந்து அவ்விடத்தில் மேற்படி பிரதேச சபையால் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் இன்றயதினமும் (சனிக்கிழமை 28) அவ்விடத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு வருகைதந்தவேளை குப்பைகளைக் கொட்டவிடாமல் மக்கள் ஒன்று திரண்டு தடுத்துள்ளனர்.
பின்னர் குப்பைகளை ஏற்றி வந்த பிரதேச சபை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் இடம்பெற்று பின்னர் அவ்விடத்திலிருந்து பிரதேச சபை செயலாளர் திருமதி.யாகேஸ்வரி வசந்தகுமாரனிடம் களுதாவளை நியூ பவர் இளைஞர் கழக அலோசகர் ஆலோசகர் மனோகரன் மதன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது…. இன்று சனிக்கிழமை வரைக்கும் இவ்விடத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கு அனுமதிக்குமாறும் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து (29) அவ்விடத்தில் குப்பைகள் கொட்டப்பட மாட்டாது என்ற பிரதேச சபைச் செயலாளரின் உறுதிமொழிக்கமைய ஏற்றிவந்த குப்பைகளை இன்றயதினம் மாத்திரம் கொட்டுவதற்கு பொதுமக்கள் அனுமதித்து தமது எதிர்ப்பு நடவடிக்கையைக் கைவிட்டனர்.
இதேவேளை இதுவரை காலமும் இக்குறித்த இடத்தில் கொட்டப்பட்டு வந்த குப்பைகள் ஞாயிற்றுக் கிழமை முதல் மேலும் கொட்டப்பட மாட்டாது, என பிரதேச சபைச் செயலாளர் உறுதிமொழி அளித்துள்ளதாகவும், தொடர்ந்து இவ்விடையம் தொடர்பில் பொதுமக்களாகிய நாம் கவனம் செலுத்தி வருவேம் எனவும் களுதாவளை நியூ பவர் இளைஞர் கழக அலோசகர் ஆலோசகர் மனோகரன் மதன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment