27 Nov 2015

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு வீடுகளுக்கு சீமெந்து வழங்கும் வேலைத்திட்டம்.

SHARE
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, 25000 வீடுகளுக்கு சீமெந்து வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 1000 வீடுகளுக்கு சீமெந்து வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் வியாழக் கிழமை (26) நடைபெற்றது.
தேசியக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினூடாக இத்திட்டத்தின் கீழ் மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 104 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 10 சீமெந்து மூட்டைகள் வீதம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி. எம்.கோபாலரெத்தினம், தேசிய வீடமைப்பு அப்பிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் முயற்சியினால் இலங்கையில் இத்திட்டத்தின் கீழ் 25000 பேருக்கு இவ்வுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  





SHARE

Author: verified_user

0 Comments: