கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் 2015 ஆம் ஆண்டுக்குரிய அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திற்குட்பட்ட காயான்மடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு நிழற்பிரதியெடுக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (26) பாடசாலை மண்டபத்தில் அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய துரைராசசிங்கம் கலந்துகொண்டதுடன் கல்வி அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது அமைச்சரின் 2015 ஆம் ஆண்டுக்கான அமைச்சு நிதி ஒதுக்கீட்டின் மூலம் 125000 ரூபா ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு இந்நிதி முலம் பெறப்பட்ட நிழற்பிரதியெடுக்கும் இயந்திரமே அமைச்சரினால் பாடசாலை அதிபருக்கு அன்பளிப்பாக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இதன்போது ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டதுடன், பாலர் பாடசாலை ஆசிரியையும் கௌரவிக்கப்பட்டார். அத்துடன் பாடசாலை அதிபர் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தமையும் குறிப்பிட்டத்தக்கது.
0 Comments:
Post a Comment