மண்முனை தென் எருவில் பற்று ( களுதாவளை) பிரதேச சபை வீடுகட்டுவதற்கான அனுமதிகளை வழங்கும் போது அவற்றை தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் நேரில் சென்று பார்வையிட்ட பின்னரே அதற்கான அனுமதியினை வழங்க வேண்டும். அவ்வாறில்லாமல் பிழையான அனுமதிகள் மூலம் அமைக்கப்பட்ட கட்டடங்கள் உடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகும் என மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர் அரங்கினை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு கிராமத் தலைவர் அ.கந்தவேள் தலைமையில் பொது விளையாட்டு மைதானத்தில் திங்கட் கிழமை (09) காலை நடைபெற்றது.
இவடிக்கல் நாட்டு நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று ( களுதாவளை) பிரதேச சபையின் செயலாளர் திருமதி.யா.வசந்தகுமாரும், கலந்து கொண்டிருந்த நிலையில் மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலாளரும் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவற்றைத் தெரிவித்தார்.
இதன்போது காலந்து கொண்டு அடிக்கல்லை நட்டு வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும்குறிப்பிடுகையில்….
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
தொழில் நுட்ப உத்தியோகத்தர் நேரில் சென்று பார்வையிடாமல் கட்டடங்கள் அமைப்பதற்கு பிரதேச சபை அனுமதியை வழங்கு கின்றது. இதனால் பல பிரச்சினைகள் உருவாகின்றன. அவ்வாறு பார்வையிடாமல் வழங்கும் அனுமதிகள் மூலம் வரும் பிரச்சினைகளுக்கு பிரதேச சபையே பொறுப்புக் கூறவேண்டும்.
இதுபோன்ற செயற்பாடுகளால் பல பிரச்சினைகள் பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு பிழையாக வழங்கிய அனுமதியில் கட்டப்பட்ட கட்டடங்களை உடைக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த விடயத்தில் நான் கூடுதலான கவனம் செலுத்தவுள்ளேன் என மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment