கடந்த மாதம் 17 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், குழுக்களின் பிரதித் தலைவர். சேல்வம் அடைக்கலநாதன், மற்றும நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரிடம் தமிழ் அரசியல் கைத்திகளை கடந்த 7 ஆம் திததி விடுதலை செய்வதாக உறுதியளித்திருந்தார்.
என கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்நதிரகுமார் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (11) மாலை அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது….
வாக்குறுதியை ஏற்றுத்தான் தமிழ் அரசியல் வைத்திகள் ஏற்கனவே அவர்களது உண்ணாவிரதத்தைக் கைவிட்டிருந்தனர். ஆனால் 7 ஆம் திகதி கடந்த நிலையிலும் கைத்திகள் விடுதலை செய்யப்படவில்லை.
தற்போது 220 அரசியல் கைத்திகள் மீண்டும் உண்ணாவிரத்தில் குதித்துள்ளார்கள். எனவே இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டிய பொறுப்பும் தார்மீகக் கடமையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்ளது.
எனவே சிறுபான்மை மக்களின் வாக்குக்களைப் பெற்று வெற்றி பெற்று வந்த இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத்தருணத்திலாவது அனைத்து அரசியல் கைத்திகளையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment