திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவ்லக்கடவெல கிராமத்தில் மின்னல் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை (18) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
50 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வயலில் இப்பெண் வேலை செய்துவிட்டு கணவருக்கு தொலைபேசியூடாக அழைப்பை மேற்கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கத்துக்குள்ளானார்.
இந்நிலையில், இவரை கோமரங்கடவெல வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment