1 Nov 2015

மட்டு மாவட்ட அரச அதிபர் - அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

SHARE
மட்டக்களப்புக்கு வருகை தந்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மோடிக்கும் (Robyn Mudie) மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்க்கும் இடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை பகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் அரசாங்க அதிபருடன் அவுஸ்திரேலிய நாட்டு உதவியில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. 
அதே நேரம், நடைபெற்று வரும் அபிவிருத்திகளின் போதுமான அளவு, பிரச்சினைகள், மக்களுடைய தேவைகள், எதிர்கால அபிவிருத்தித்தித் திட்டங்கள் நிதியுதவிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்  மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்தார்.

இந்த வருகையின் போது நேற்று வவுணதீவு பிரதேசத்திலுள்ள மாவடி ஆறு அணைக்கட்டினைத் திறந்து வைத்து, காங்கேயனோடையில் அமைக்கப்பட்டுள்ள கைத்தறிப் புடவை தயாரிப்பு நிலையத்தினைச் சென்று பார்வையிட்டு அங்குள்ள நிலைமைகள் தேவைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

அத்துடன், மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் இயங்கி வரும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கும் மையங்களின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் அவுஸ்திரேலியாவின் இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான கவுன்சிலர் திருமதி சார்ளட் பிளன்டலும் உடனிருந்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: