வாசிப்பினை ஒரு நாளிலோ அல்லது ஒரு மாத்திலோ மாத்திரம் மட்டுப்படுத்தாமல் வருடம் முழுவதும் வாசிப்பு பழக்கத்தினை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்தம் என்ற போர்வையில் நாம் பின்தள்ளப் பட்டடிருந்தோம் இதன் காரணமாக சனத்தொகையிலும் நாம் பின்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இவைகளையெல்லாம் எதிர் காலத்தில் வெற்றிகொண்டு வீறு நடைபோட வேண்டுமாக இருந்தால் கல்வி என்கின்ற ஆயுதத்தை நாம் அனைவரும் கையில் எடுத்து செயற்பட வேண்டும். இவ்வாறான கல்வி அபிவிருத்திக்காகத்தான் பிரதேச சைபகளுடாக கிராமங்கள் தோறும் நூலகங்களை அமைந்து கல்வி மற்றும் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவித்து வருகிக்றோம்.
என மட்டக்களப்பு மாட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் தெரிவித்தார்
மட்டக்களப்பு முனைத்தீவு பொது நூலகத்தின் வாசகர் வட்டம் நடாத்திய வருடாந்த பரிசழிப்பு விழா நிகழ்வு சனிக் கிழமை மாலை (07) மட்.முனைத்தீவு சக்தி மகாவித்தியாலய மட்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக்க கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…
எமது எதிர்கால சந்ததியினரின் கல்வியினை மேலேங்கச் செய்ய வேண்டும் அவற்றுக்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிகுந்த இன்றியமையாததாக இருக்க வேண்டும்.
பிரதேசங்கள் மென்மேலும் முன்னேற்றமடைந்து செல்ல வேண்டுமாக இருந்தால் அது கல்வியினால் மட்டுமே முடியும்.
பின்தங்கிய பிரதேசமான இந்த போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்து ஒருவர் இலங்கையிலே உயர் பரீட்சையாகக் காணப்படும் நிருவாக சேவை பரீட்சையில் சித்தி பெற்று நிருவாக அதிகாரி என்ற பதவியினைப் பொறுப்பேற்றவுள்ளார். என்றால் இப்பிரதேசம் தொடர்ந்தும் பின்தங்கிய பிரதேசமாக இருக்க முடியாது. எதிர் காலத்தில் இப்பிரதேசத்திலிருந்து பல கல்விமான்களும், நிருவாக அதிகாரிகளும் உருவாக்கப்பட வேண்டும். இவற்றுக்கு அயராத முயற்சிகளும், ஈடுபாடுகளும் தேவை.
பிரதேச சபைகள் அவர்களது செயற்பாடுகளுக்குத் தேவையான நிதிவசத்திகளை தாமாகவேதான் சேகரித்துக் கொண்டு இயங்க வேண்டும். ஆனால் போதியளவு வருமானம் இந்த போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு கிடைப்பதில்லை பிரதேச சபையில் வருமானம் அதிகரித்தால் அவற்றினைக் கொண்டு மக்கள் மத்தியில் பல அபிவிருத்தித் திட்டங்களையும் மேற்கொள்ளலாம். ஆனால் நிலமை அவ்வாறில்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment