மஹிந்த அரசாங்கமும் பலரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்துள்ளது. அந்த செயற்பாட்டினையே இன்றைய நல்லாட்சி அரசாங்கமும் செய்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுசெய்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இதன்போது அவர் தெரிவித்தாவது,
ஒரு காலத்திலும் இல்லாத வகையில் இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு நாம் ஆதரவு வழங்கினோம்.
இந்த நாட்டில் எந்த சுதந்திர தினத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளாத நிலையில், இந்த நல்லாட்சியின் சுதந்திர தினத்தில் எமது தலைவர் கலந்துகொண்டு அவர்களுக்கு உற்சாகத்தினை வழங்கினார்.
கடந்த காலத்தில் பொது மன்னிப்பின் கீழ் பலர் விடுதலை செய்யப்பட்ட போதிலும் தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படாமை வேதனைக்குரிய விடயமாகும்.
இந்த அரசாங்கம் எம்மை ஏமாற்றி விட்டதாகவே கருத வேண்டும்.
உண்மையில் இது பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டிய விடயம்.
எனினும் புனர்வாழ்வளித்து அரசாங்கம் விடுதலை செய்ய எடுத்துள்ள நடவடிக்கையினையிட்டு ஓரளவு திருப்தி அடைகின்றோம்.
மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பலரை புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்துள்ளது.
மஹிந்த அரசாங்கம் செய்த நடவடிக்கைக்கே இந்த நல்லாட்சி என்னும் அரசாங்கமும் வந்துள்ளது என்றார்.
0 Comments:
Post a Comment