திருகோணமலை மாவட்டத்தில் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மூவர் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஏ.ஹமீர் தெரிவித்தார்.
சேருவில தேர்தல் தொகுதியில் 290 வாக்குகளைப் பெற்று ரண திஸர இளைஞர் கழகத்தைச் சேர்ந்த டி.எம்.பிரதீப்குமாரவும் மூதூர் தேர்தல் தொகுதியில் நெய்தல் நகர் இளைஞர் கழகத்தில் போட்டியிட்ட எம்.என்.முகம்மது முஸாகிர் 259 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
இதேவேளை திருகோணமலை தேர்தல் தொகுதியில் 06 பேர் வேற்பாளர்களாக போட்டியிட்டதில் லிங்சிட்டி இளைஞர் கழகத்தில் போட்டியிட்ட கருணாநிதி ராஜ்கரன் 186 வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment